ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இடைக்கால அரசாங்கம் குறித்த விடயங்கள் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளவில்லையென தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் தெரிவித்தார்.
அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 15 கட்சி உறுப்பினர்களின் இடைக்கால அரசாங்கம் குறித்த கோரிக்கை கடிதம் வாசிக்கப்பட்டது. பின்னர், அதனை ஆவணப் பதிவில் பாதுகாப்பாக வைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார். அவ்வளவு தான் அது தொடர்பில் நேற்றைய கூட்டத்தில் இடைக்கால அரசாங்கம் தொடர்பில் பேசுவதற்கு எடுக்கப்பட்ட நேரம்.
இரண்டு மணி நேரமாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கட்சியைப் பலப்படுத்துவதற்கு முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.