வழக்கு விசாரணைகளை திசைதிருப்பும் திட்டத்திலேயே கூட்டு எதிர்க்கட்சியினர் இடைக்கால அரசாங்கம் தொடர்பில் பேசிவருகின்றனர். விசேட நீதிமன்றங்களில் இவர்களுக்கு எதிரான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது அவர்களின் நிலையை அறிந்துகொள்ளலாம் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியில் இருக்கும் அதிகமானர்களுக்கு எதிராக விசேட நீதிமன்றங்களில் வழங்கு விசாரணைகளுக்கு திகதி குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
வழக்கு விசாரணைகளுக்கு முகம்கொடுப்பதற்கு அஞ்சியே தற்போது இவர்கள் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்போவதாக தெரிவித்து அரசாங்கத்தின் நடவடிக்கைகளை திசைதிருப்ப முயற்சித்து வருகின்றனர்.