கொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நாளைமறுதினம் ஆரம்பம்!

247 0

இலங்கை விமானப்படையின் ஏற்பாட்டில் ‘ கொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு – 2018 ” கொழும்பில் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை வரை  இடம்பெறவுள்ளது.

 

இலங்கை அமைவிடமானது பல்வேறு வகையிலும் முக்கியமானதாகவே காணப்படுகின்றது. இவற்றை கருத்தில் கொண்டு இந்து சமுத்திர நாடுகளுடன் இணைந்து பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் அனர்த்தங்களில் ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தும் வகையில் இம்முறை கொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு நடைப்பெறவுள்ளதாக தெரிவித்த விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பத்தி, இந்தியா, சீனா , அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட  22 நாடுகள் இதில் கலந்துக்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியிட்டார்.

அதற்கமைய இந்தியா , சீனா , அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட  22 நாடுகளை சேர்ந்த 52 பாதுகாப்பு துறைசார் அதிகாரிகள் இந்த சர்வதேச கருத்தரங்கில் கலந்துக்கொள்ள உள்ளனர்.

2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த விமான கருத்தரங்கு தொடர்ந்தும் 4 ஆவது தடவையாகவும் முன்னெடுக்கப்பட உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் விமானப்படை என்ற வகையில் பெற்றுக்கொண்ட அனுபவங்களை ஏனைய நட்பு நாடுகளுடன் பகிரந்துக்கொள்ளுதல் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படும் நாடுகளுக்கு அனுபவங்கள் பயன் தரும் வகையில் இந்த கருத்தரங்கு ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

Leave a comment