த.தே.கூ.வின் உள்நோக்கம் மாறுபட்டதாகவே உள்ளது – ஜி. எல். பீரிஸ்

251 0

புதிய அரசியலமைப்பு உருவாகாவிடின் மீண்டும் யுத்த சூழல்  ஏற்படும் என்று  தமிழ் தேசிய  கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசாங்கத்திற்கு எச்சரித்தமையினை தொடர்ந்தே புதிய அரசியலமைப்பு தொடர்பிலான அறிக்கை இம்மாத இறுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என  பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிடின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்க மாட்டோம் என்று தமிழ் தேசிய கூட்டமைபினர் குறிப்பிடுவதன் உள்நோக்கம் மாறுப்பட்டதாகவே காணப்படுகின்றது.

எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு குறுகிய நோக்கங்களுக்கு மாத்திரமே அரசாங்கத்தின் பங்காளியாக செயற்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Leave a comment