மக்களின் பொருளாதாரம் குறித்து நல்லாட்சி சிந்திப்பதில்லை-கே.டீ.லால்காந்த

312 0

நாட்டு மக்கள் பாரதூரமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கைச்செலவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் அந்த பொருளாதார நெருக்கடியை மக்கள் ஓரளவுக்கேனும்  சமாளிக்கக்கூடியதாக  நிவாரணம் வழங்கும்போது  நல்லாட்சி அரசாங்கம்  சிந்திப்பதாக இல்லை என்று குற்றம் சாட்டியிருக்கும்  தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவரான கே.டீ.லால்காந்த,

அரசாங்க ஊழியர்களுக்கும் தனியார் துறை ஊழியர்களுக்கும் கணிசமான அளவு சம்பள  உயர்வை வழங்குவதற்கு  அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக  எதிர்வரும்  23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில்  அரசாங்கத்திற்கு எதிராக  மாபெரும் எதிர்ப்பு   போராட்டமொன்றை நடாத்தவிருப்பதாக அறிவித்துள்ளார்.

கொழும்பு  மருதானையில் அமைந்துள்ள சமூக சமய நிலையத்தில்  இன்று திங்கட்கிழமை  இடம் பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றம் போதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a comment