கூட்டு எதிரணியின் இடைக்கால அரசாங்கம் அமைக்கும் திட்டம் மிதக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எனத் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்திலிருந்து வெளிவர பின்வாங்கி வருகின்றமையே இதற்கு காரணமாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் தங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்தால் அதனை நாங்கள் சாதகமாக பயன்படுத்தி அரசாங்கத்தை வீழ்த்த நடவடிக்கை எடுப்போம். அதனால் இடைக்கால அரசாங்கம் அமைக்கும் திட்டம் வெற்றிபெறாவிட்டாலும் வரவு செலவு திட்டத்தை தோற்கடித்தேனும் அரசாங்கத்தை வீழ்த்த நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.