இன நல்லிணக்கத்திற்கு இராணுவத்தினர் முட்டுக்கட்டை – சிவசக்தி ஆனந்தன்

474 0

anintnஇன நல்லிணக்கத்திற்கு இராணுவத்தினர் முட்டுக்கட்டையாக திகழ்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

பல்கலைக்கழக திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் மக்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி யாழ்ப்பாணத்தில் நாளை எழுக தமிழ் மக்கள் பேரணி இடம்பெறவுள்ளது.

குறித்த பேரணியை தடுக்க இராணுவத்தினரோ அல்லது புலனாய்வுப் பிரிவினரோ முயற்சிக்கக் கூடாது.

அவ்வாறு முயற்சித்தால் அது நாட்டை ஆபத்தான நிலைக்கே இட்டுச்செல்லும்.

நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர தமிழ் மக்கள் பெரும் பங்காற்றியிருந்தனர்.

எனினும், இந்த அரசாங்கம் மஹிந்த அரசாங்கம் பயணித்த பாதையிலேயே பயணிக்கிறது.

மீள்குடியேற்றம், கைதிகள் விடுதலை, காணாமல் போனவர்கள் விவகாரம் என்பவற்றில் இதுவரை எந்தவொரு உறுதியான தீர்வும் வழங்கப்படவில்லை.

இந்நிலையிலேயே கடந்த தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியிருந்த விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி நாளைய பேரண இடம்பெறவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.