எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் அறிக்கை மிக விரைவில் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன் அடுத்த வருடத்தின் அரம்ப பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது புதிய தேர்தல் முறைமை தொடர்பான தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்திவிட்டோம். ஆனால் மாகாணசபை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பீ. பெரேரா குறிப்பிடுகையில்,
எந்த முறைமையிலாவது மாகாணசபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தினால் மாத்திரமே நாட்டின் அபிவிருத்தி உள்ளிட்ட பொருளாதார பணிகளை மிக மும்முரமாக மேற்கொள்ள முடியும்.
அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பொருளாதார மற்றும் அபிவிருத்தி பணிகள் முறையாக சென்றடைய வேண்டுமானால் நிர்வாக பிரிவுகள் பலமாக இருக்க வேண்டும்.