பதுளை வினீதகம மற்றும் உடுவர பகுதிகளில் நேற்று (14) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 29 வயதுடைய கணவன், 27 வயதுடைய மனைவி மற்றும் 25 வயதுடைய சகோதரன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் ஏனைய சந்தேக நபர்கள் 22, 23 மற்றும் 20 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஹெரோயின் 50 மில்லிகிராம் 2000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.