அரசாங்கத்தின் மீது மக்கள் தற்போது விரக்தியில் உள்ள நிலையில் அவர்களுடன் பொதுஜன பெரமுன கூட்டணியமைப்பது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இடைக்கால அரசாங்கத்தில் ஒன்றிணைவது அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தில் பங்குகொள்வது போன்றதாகும். ஆகவே பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் எவ்வித தொடர்புகளுமின்றி தனித்தே தேர்தல்களில் போட்டியிட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.