இடைக்கால அரசாங்கம் உருவாகுவது சாத்தியமற்ற விடயம் எனத் தெரிவித்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்தே போட்டியிடும். அதுவரை கூட்டரசாங்கம் இணைந்தே செயற்படும் என்றார்.
மேலும் எதிர்தரப்பினர் தம்மை பாதுகாத்துக் கொள்ளவே இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முயற்சிகளை மேற்கொள்கின்றனரே தவிர பொதுநல நோக்கம் ஏதும் கிடையாது.
தற்போது கடந்த காலத்தில் இடம்பெற்ற பல பாரிய மோசடிகள் மற்றும் குற்றச்செயல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய நிலையில் பலர் காணப்படுகின்றனர். வெகுவிரைவில் பலர் சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தர்.