புதிய அரசியலமைப்பு நல்லிணக்கத்துக்கு பாதிப்பாக அமையாது – மஹிந்த அமரவீர

327 0

786275fe186721de537b580245bb5fef_xlபுதிய அரசியலமைப்பு புலிகள் அமைப்பின் மீள் உருகாத்திற்கு வலு சேர்ப்பதாகவும் இனங்களுக்கிடையில் முறுகள் நிலையை ஏற்படுத்துவதற்கும் பிரதான காரணமாக அமையும் என்ற கூட்டு எதிரணியின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

தற்போது வெளிநாடுகளில் எமது நாட்டினை பாராட்டி, நாடு குறித்த நல்ல அபிப்பிராயங்களை வெளிபடுத்துகின்றனர்.

குறிப்பாக அமெரிக்க தலைவர் பராக ஒபாமா எமது நாட்டின் செயற்பாடுகளை வாழ்த்தியுள்ளார்.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா.அமர்வுகளில் பங்கேற்கச் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கும் எமது நாட்டுக்குமான ஆதரவும் பெருகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனம் நாட்டின் தற்கால நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் நாளுக்கொரு பொய் வீதம் உருவாக்கிகொண்டிருக்கு கூட்டு எதிரணி நாடு பிளவு பட போகின்றது என்ற எண்ணப்பாட்டை மக்களிடத்தில் பரவச் செய்கின்றனர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.