மலையகத்திற்கான தனிப்பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான தக்க தருணம் ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
காலம் தாழ்த்தாது தேசிய அரசாங்கம் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் நாடாளுமன்றில் வலியுறுத்தினார்.
மலையகத்திலிருந்து தற்போது 200 மாணவர்களே ஆண்டுதோறும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகின்றனர்.
இத்தொகையை 1500ஆக அதிகரிக்கவேண்டுமெனவும் குறிப்பிட்டார்.