தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாளை நடைபெற உள்ள எழுக தமிழ் மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வு பூர்வமாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
எந்த வித அரசியல் சார்பும் இன்றி, தமிழ் மக்களின் நலநன மட்டுமே முன்னுரிமைப்படுத்தி நடாத்தப்படும் இப் பேரணியானது, நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்தும் – யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இருந்தும் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி ஒன்றிணைந்து யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தை சென்றடையும்.
இப் பேரணியில் மக்கள் பங்கேற்கும் வகையில் போக்குவரத்து வசதிகள் கங்கேற்கும் வகையில் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கில்களில் வருவோர் பேரணியில் இணைந்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப் பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் உணவுச் சாலைகள், மருந்தகங்கள், எரிபொருள் நிலையங்கள், வாகனத் திருத்துமிடங்கள் என்பவை தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள், சந்தைகள் மற்றும் நிறுவனங்களை பூட்டி பேரணியின் வெற்றிக்கு ஒத்துழைக்குமாறு உரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.
தமிழ் மக்களின் பேராதரவுடன் நடைபெற இருக்கும் இப்பேரணியை குழப்பும் நோக்குடன் சிலர் விசமத்தனமான பிரச்சாரங்களை முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும் எம்மால் அறிய முடிகின்றது.
குறிப்பாக சில ஊடகங்கள் இவ்வாறான உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இதே வேளை கூட்டு பேரணி என்ற வகையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி என்ற பெயர் குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாண நகரப் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இத்தகய சுவரொட்டிகள் யார் வெளியிட்டார்கள் என்பது தெரியவில்லை. ஆகியினும் இதற்கும் தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்கும் பேரணிக்கு எதுவித தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதே வேளை தமிழ் மக்களின் நலன் சார்ந்த பேரவையால் முன்மொழியப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அதனை ஆதரிப்பவர்கள் எவராயிலும் இப் பேரணியில் கலந்து கொள்ள முடியும்.
எனினும் இப் பேரணியில் அரசியல் கட்சி சார்பற்றது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம். தமிழ் மக்கள் உரிமையை அகிம்சை வழியில் வலியுறுத்தும் இப் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் அணி திரண்டு பங்கேற்குமாறு கேட்டு நிற்கின்றோம்.
- Home
- முக்கிய செய்திகள்
- எழுக தமிழ் பேரணியை திசை திருப்ப சதி முயட்சி தடைகளை தாண்டி ஒன்றிணையுங்கள் -தமிழ் மக்கள் பேரவை-
ஆசிரியர் தலையங்கம்
-
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024 -
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024 -
உலகிலேயே மிகச்சிறந்த தானம் இரத்த தானம்!
June 14, 2024
தமிழர் வரலாறு
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தின் கோரத் தாண்டவம்!
October 21, 2024 -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் -12 ம் நாள்
September 26, 2024 -
தியாக தீபம் திலீபன் – பதினோராம் நாள் நினைவலைகள்!
September 25, 2024
கட்டுரைகள்
-
5000 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்பு
October 3, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
பிரான்சில் கேணல் பரிதி அவர்களின் நினைவு சுமந்த மதிப்பளித்து நிகழ்வு
November 22, 2024 -
பிரான்சின் ஏனைய வெளி மாநிலங்களிலும் இடம்பெறவுள்ள மாவீரர் நாள்- 2024
November 18, 2024 -
மேதகு தேசியத் தலைவரின் அகவை விழா – யேர்மனி
November 2, 2024 -
பிரான்சில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு 2024
October 20, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2024 நெதர்லாந்து.
October 17, 2024 -
மாவீரர் நாள் – 2024 -பிரான்சு.
October 14, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 – சுவிஸ்.
October 14, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2024 -பெல்சியம்
October 7, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2024 -பிரித்தானியா
October 5, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 யேர்மனி, Dortmund.
September 29, 2024