இடைக்கால அரசாங்கம் குறித்த யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அது நடைபெறும் வரையில் எந்தவித கருத்தும் தெரிவிக்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசாங்கத்தை மாற்றுவதே எதிர்க் கட்சியின் நடவடிக்கையாகும். இதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்த பின்னிற்கப் போவதில்லை.
கூட்டு எதிர்க் கட்சிக்கு இடைக்கால அரசாங்க யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அது குறித்து ஆராய்ந்து வருகின்றோம். யோசனைகள் முன்வைக்கப்பட்டால் அது குறித்து ஆராய்வது எதிர்க் கட்சியான எமது பொறுப்பாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.