தொடர்ச்சியாக ஈழத் தமிழர்கள் தமது உயிரை பணயம்வைத்துச் சிறு மீன்பிடி கப்பல்களில் அகதிகளாகவெளியேறிவருகின்றனர்

1356 0

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னரும் தொடரும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளால் தொடர்ச்சியாக ஈழத் தமிழர்கள் தமது உயிரை பணயம்வைத்துச் சிறு மீன்பிடி கப்பல்களில் தமது தாய் நிலத்தை விட்டு அகதிகளாகவெளியேறிவருகின்றனர்.

இந்த சூழலில் கடந்த செப்ரெம்பர் மாதம் 11 ஆம் திகதி சிறிலங்கா கடல்பிரதேசத்தில் இருந்து இந்தியப் பெருங்கடலில் இருக்கும் பிரெஞ்சுத் தீவாகியியரெயூனியனை நோக்கி 1 பெண் மற்றும் குழந்தைகள் உட்பட 90 ஈழத்தமிழ் அகதிகள்பயணித்த கப்பல் சிறிலங்கா கடல் பிராந்தியத்துக்குள் வைத்து இடைமறிக்கப்பட்டு இந்த 90 தமிழர்களும் கைது செய்யப்பட்டு மிக மோசமானவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டர்கள் என்ற செய்தி வெளியாகி இருக்கின்றது.

அதே நேரத்தில் 21 மார்ச் 2018 இல் மிகவும் மோசமான சூழலில் 6 ஈழத்துத் தமிழர்கள்நடுக்கடலில் வைத்து மீட்கப்பட்டு ரெயூனியன் தீவில் ஒரு கோவிலில்தங்கவைக்கப்பட்டு இருந்தார்கள் அவர்களின் நிலை என்ன என்று தெரியாதசூழலில் அக்டோபர் 6 ஆம் திகதி சிறு கப்பல் மூலமாக ரெயூனியன் தீவைவந்தடைந்த, 30 வயதுக்கும் 16 வயதுக்கும் உட்பட்ட 8 பேர், அகதி அந்தஸ்தை கோரிஇருந்தார்கள்.

ஆனால் அவர்களின் கோரிக்கையை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் அந்ததீவின் பொலீஸ் உயர் அதிகாரி (Prefet) ஒக்டோபர் 9 ஆம் திகதி ஜெனீவாஅகதிகளுக்கான சட்டத்தில் கையெழுத்திட்ட நாடாகிய பிரான்சு அதற்குப்புறம்பாக இந்த 8 பேரையும் எவ்விவித அடிப்படை விசாரணையும் இன்றி சிறிலங்காவை நோக்கி பொலிஸ் பாதுகாப்புடன் மொரிசியஸ் நாடு ஊடாக நாடு கடத்திஇருக்கிறார்கள். அவர்கள் சிறி லங்காவில் வைத்து சட்டத்தை மீறி நாட்டை விட்டுவெளியேறியதற்காக கைது செய்யப்படுவார்கள் என்று தெரிந்தும் பிரான்சு எடுத்தஇந்த முடிவும் அகதி அந்தஸ்து கோருதல் சட்டத்துக்கு முரணானது. சிறி லங்காவில்தொடர்ச்சியாக தமிழர்கள் ராணுவ கட்டுப்பாட்டுக்குள்ளும், இப்போது இருக்கும்பயங்கரவாத்த் தடைச் சட்டம் மற்றும் புதிதாக்க் கொண்டு வரப்பட இருக்கும்பயங்கரவாதத் தடை சட்டம் ( counter terrorism act) முன்பு இருந்ததை விட மிகமோசமானது என்று தெரிந்தும், இந்த எட்டு பேர் நாடு கடத்தப்பட்டதுகண்டிக்கத்தக்கது.

இந்த மனிதநேயத்திற்குப் புறம்பான நாடுகடத்தலை பிரான்சு தமிழ் ஈழ மக்கள்பேரவை வன்மையாக கண்டிப்பதோடு, பிரான்சில் வாழும் ஈழத் தமிழர்கள் சூழல்மாற்றத்தை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பதை கவனத்தில்கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறோம்.
செய்தி : பிரான்சு தமிழ் ஈழ மக்கள் பேரவை.

Leave a comment