ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிரான மனு 25ம் திகதிக்கு ஒத்தி வைப்பு

246 0
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு எதிர்வரும் 25ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து தன்னை திட்டியதுடன் அச்சுறுத்தியதாகவும் குற்றம் சுமத்தி பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் ஆர். பவானி தாக்கல் செய்த மனு இன்று (11) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக் அழைக்கப்பட்டிருந்தது.

சம்பவத்தில் உள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் 25ம் திகதி திறந்த நீதிமன்றத்தில் மனுவை அழைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் பிரதிவாதியான ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க உள்ளிட்டவர்கள் சார்பாக நீதிமன்றில் ஆஜராவதற்கு சட்ட மா அதிபர் மறுப்புத் தெரிவித்ததையடுத்து தனிப்பட்ட சட்டத்தரணி ஆஜராகியுள்ளார்.

பாடசாலையில் அனுமதிப்பதற்காக, முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவிடம் இருந்து எடுத்துக் கொண்டு வந்த கடிதத்தை நிராகரித்ததால், முதலமைச்சர் தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து தன்னை திட்டி, அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்ட அதிபர் தனது மனுவில் கூறியுள்ளார்.

இதன் காரணமாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அதிபர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment