பெரும்பாலான அரசியல் கைதிகள் மீது பாரிய குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவர்களை விடுவிக்க முடியாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் சிறையில் 20க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கைதிகளில் 23 பேர் மீதான குற்றச்சாட்டுகள் குறைக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்குள் அவர்களை விடுவிக்க முடியும் என்று கூறினார்.
ஆனால் ஏனையவர்கள் மீது கொலைக்குற்றம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நிலையில், அவர்களை விடுவிக்க முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசியல் கைதிகள் தங்களது வழக்கு விசாரணைகளை தமிழ் பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு மாற்றுமாறு கோரி இருந்தனர்.
இது தொடர்பில் அமைச்சரை கேட்ட போது, இந்த விடயத்தை சட்ட மா அதிபரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறினார்.
அத்துடன் ஜனாதிபதி நாடு திரும்பியதன் பின்னர், அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிட்டார்.
இதேவேளை, அரசியல் கைதிகளுக்கு நிபந்தனைகள் இல்லாத விடுதலை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து மன்னாரில் கையெழுத்து திரட்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் அடிகலார் இதனை தெரிவித்தார்.