எந்த ஒரு சேவையும் மக்களுக்க சுமையாக இருக்கக் கூடாது. உலக தபால்சேவையுடன் ஒப்பிடும்போது எமது நாட்டின் தபால்சேவை இன்னும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்று சபாநாயகர் தேசபந்து கரூ ஜயசூரிய தெரிவித்தார்.
கண்டி பொல்கொல்லை மஹிந்த ராஜபக்ஷ மண்டபத்தில் இடம் பெற்ற உலக தபால் தின பவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ’ஹலீமின் அழைப்பின் பேரில் சபாநாயகர் கரூ ஜயசூரிய இவ்வைபவத்தில் கலந்துகொண்டார்.
இங்குமேலும் உரையாற்றிய சபாநாயகர் கரூ ஜயசூரிய
இலங்கையின் தபால்சேவை என்பது 215 வருடங்கள் பழமைவாய்ந்ததாகும் . அக் காலத்தில் எமது நாட்டின் தபால் சேவைக்கு பாரிய வரவேற்பு இருந்து வந்தது. இலங்கையில் ஆரம்ப காலத்தில் தபால்சேவையில் 181 ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். இன்று அது 26,000 ஊழியர்களாக அதிகரித்து நாடலாவிய ரீதியில் மக்களுக்கு சேவைகளை வழங்கும் ஒரு முக்கியசேவையாக திகழ்கிறது.
இன்று தபால் துறைக்கு பொறுப்பாக ஒரு சிறந்த அமைச்சர் இருக்கின்றார்’ அவர் தூரநோக்குடன் செயல்பட்டு தபால் துறையின் முன்னேற்றத்திற்கு சேவைகளை செய்து வருவதை எங்களால் காண முடிகின்றது. இன்று உலக நிலைகளை அவதானிக்கும் போது தபால் சேவையும் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. அதேபோன்று புதிய அம்சங்களை உள்வாங்கி எமது நாட்டின் தபால்சேவையையும் முன்னேற்ற முன் வரவேண்டும். எந்த ஒரு சேவையும் மக்களுக்கு பாரமாக இருக்கக கூடாது.
இன்று எமது நாட்டின் சில நிலமைகள் தொடர்பாக கவலை அடையவேண்டியுள்ளது. பல இடங்களிலும் எதிரப்பு ஆர்ப்பாட்டங்கள் நடாத்துகின்றனர். பாதைகளை மறைத்து டயர் எரித்து ஆர்ப்பாட்டம் நடாத்துகின்றனர். இவை அனைத்தும் தேசத் துரோக செயல் என்றே கூறவேண்டும் , இவ்வாரான செயல்களினால் எமது நாடு தினம் பின்னோக்கிச் செல்கின்றது என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கருத்துதெரிவிக்கையில் ,
இன்றைய தபால்சேவை எதிர்காலத்திற்கு தேவையான விதத்தில் புனர்நிர்மானம் செய்யப்பட்டு வருகின்றது. புதிய அம்சங்கள் பல சேர்க்கப்டுகின்றன. தபால் சேவை இலாபம் ஈட்டும் சேவையல்ல இது மக்களுக்கு சேவை வழங்கும் ஒரு துறை.. கடந்த காலங்களில் தீர்க்கப்படாத பல குறைபாடுகள் இத் திணைக்கத்திலும் ஊழியர்கள் மத்தியிலும் காணப்பட்டது. அவற்றில் பெரும்பாலாவை தற்போது எங்களால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில பிரச்சினைகள் தீர்ப்பதற்கான இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. தபால் துறை இந்த நாட்டின் ஒரு முக்கியமான துறை என்றும் அதனை மேலும் விருத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என்றும் அவர் இங்குதெரிவித்தார்.
லக தபால் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்டபோட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் திறமைமிக்க தபாலகங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன,
இவ் வைபவத்தின் போது தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டீ.பீ. மீகஸ்முல்ல, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோரும் உரையாற்றினர்