இந்தியாவில் மேற்கொள்ளப்படுகின்ற துறைமுக அபிவிருத்திகளால், கொழும்பு துறைமுகத்துக்கு பாதிப்பு ஏற்படாது என்று இந்தியா மீண்டும் அறிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் கொழும்பு துறைமுக விஸ்தரிப்பின்போது இந்திய நிறுவனங்களும் அதில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளன என்;றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக்கரை துறைமுகங்களின் அடித்தள கட்டமைப்புக்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றமையானது, கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகளை பாதிக்கும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
இதனை மறுத்துள்ள உயர்ஸ்தானிகர், இந்திய துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றபோது இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்துறைக்கு கொழும்பின் துறைமுகம் எதிர்க்காலத்தில் முக்கிய பங்கை வகிக்கும் என்று தெரிவித்துள்ளார்.