குற்றம் இளைத்தவரகளாக இருக்கலாம் அல்லது சந்தேகத்தின் பெயரில் சிறையில் இருபவர்காக இருக்கலாம், ஆனால் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சபையில் வலியுறுத்தினார்.
இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது எதிர்க்கட்சி தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
காலம் தாழ்த்தியேனும் இந்த காரியாலோம் உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கது. காரியாலையம் உருவாக்கப்பட்டு உண்மை, நீதி, பொறுப்புக்கூறல், இழப்பீடுகள் மற்றும் மீண்டும் இவை இடம்பெறாமை என்பன நிலைமாறு பொறிமுறையின் அம்சங்களாகும். இவை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கியமம் பெறுகின்றது.
இந்த சட்டமூலம் வரவேற்கதக்க விடயம். ஆனால் இது நீதியை புறக்கணிக்கும் வகையில் அமையக் கூடாது. இழப்பீடுகள் குறித்த காரியாலையம் மூலமாகவேனும் அரசியல் கைதிகளின் விடுதலையை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் வலியுறுத்தினார்.