அடுத்த மாதம் ஈரான் மீதான பொருளாதார தடை விதிப்பு மற்றும் சீனாவுக்கு எதிரான வரி அதிகரிப்பு என்பவற்றின் தாக்கம் உலக சந்தையில் எரிபொருள் விலையில் மேலும் தாக்கம் செலுத்தும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது இலங்கைக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமரிடமான கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்கவினால் எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது டொலர் பெறுமதி அதிகரிப்பும் எனக்கு தலையிடியாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.