எரிபொருள் விலை சூத்திரம் என கூறிக்கொண்டு ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதியில் மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் நோக்கியில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என சபையில் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் எரிபொருள் விலை சூத்திரத்தை யாருக்கும் காட்டாதிருப்பதன் காரணமென்ன என பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின்போதே அவர் பிரதமரிடம் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
மேலும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படும் போது விலை சூத்திரத்திற்கமைய இடம்பெறுவதாக கூறினாலும் அதனை மக்களுக்கு காட்டுவதில்லை. மக்களை ஏமாற்றியே விலை அதிகரிக்கப்படுகின்றது.
அரசாங்கம் சூத்திரத்தை மறைப்பது ஏன். சர்வதேச சந்தையில் எண்ணெய் அதிகரிக்கும் போது விலை சூத்திரத்திற்கமைய இங்கு விலைகள் அதிகரிக்கப்படுவதாக கூறும் போதும் அதற்காக அறவிடப்படும் வரியில் மாற்றம் மேற்கொள்ளப்படாது இருப்பது ஏன். அறிபொருள் விலையை விடவும் அதற்கான வரியே அதிகமாகும் எனவும் தெரிவித்தார்.