யுத்தத்தின் போது பல பாதிப்புக்கள் ஏற்பட்டன அதனுடைய உண்மை கண்டறியப்பட வேண்டும்.அதேபோல் மோதல்கள் இடம்பெற்றது,இதில் கற்றுக்கொண்ட பாடங்களை கொண்டு தீர்வுகள் நோக்கி பயணிக்க வேண்டும். மாறாக பழிவாங்கல் காரணிகளாக அமைந்துவிடக்கூடாது.
இழப்பீடுகள் பற்றிய அலுவலகத்தால் பரிந்துரைக்கப்படும் கொள்கைத் திட்டங்கள் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்படும்போது அவை அரசியல் மயப்படுத்தப்படலாம் என சந்தேகம் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் குறிப்பிட்டார்.
இழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த சந்தேகத்தை முன்வைத்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
அதேபோல் குறித்த சட்டமூலம் தொடர்பில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள சட்டரீதியான வியாக்கியானத்தைப் புரிந்துகொள்ள கடினமாக உள்ளது.
நிவாரணங்கள் வழங்கும் நோக்கில் செயற்படும் இந்த விடயங்களில் இதுபோன்ற விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது.
இவ்வாறான நிலையில் குறித்த சட்டத்தை நிறைவேற்றி கூடிய வரையில் இழப்பீடுகள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என நம்புகின்றோம் எனக் குறிப்பிட்டார்.