எனக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹிருனிகா

226 0

எனக்கு எதிராக சில தனியார் ஊடகங்கள் மேற்கொள்ளும் பொய் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நிதி குற்றப் புலனாய்ப்பு பிரிவில் முறைப்பாடு செய்வேன். அத்துடன் எனக்கு நியாயம் கிடைக்க சபாநாயகர் மற்றும் பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச்  சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

 

கடந்த 8ஆம் திகதி எனக்கு எதிரான வழக்கு விசாரணை ஒன்று இடம்பெற்றது. இதன்போது வழக்குடன் தொடர்புபட்ட அரச சட்டத்தரணி, எதிர்தரப்பு சட்டத்தரணி மற்றும் எனது சட்டத்தரணி ஆகியோர், இந்த வழக்கு தொடர்ந்து நீடித்துக்கொண்டு செல்லாமல் இணக்கப்பாட்டுக்கு வருவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருக்கின்றது.

ஆனால் அதுதொடர்பில் எனது சட்டத்தரணியோ நானோ எந்த கருத்தும் தெரிவித்திருக்கவில்லை. ஆனால் அன்றைய இரவு தனியார் ஊடகமொன்றில் குறித்த வழக்கில் நான் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக செய்தி வெளியிட்டிருந்தது. இதுதொடர்பாக நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்தருந்தேன். ஆனால் நான் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை  கருத்திற்கொள்ளாமல் அவர்களால் இடம்பெற்ற தவறுக்கு வருத்தம் தெரிவிக்காமல் செயற்பட்டது.

அத்துடன் இன்று சிங்கள பத்திரிகை ஒன்றில் எனக்கு அரசாங்கத்தின் 2கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது முற்றிலும் பொய்யான செய்தியாகும். இவ்வாறு உண்மைக்கு புறம்பான செய்திவெளியடப்பட்டிருப்பது தொடர்பாக சபாநாயகர் மற்றும் பிரதமர் தலையிட்டு எனக்கு நீதி கிடைக்க நடவிடிக்கை எடுக்கவேண்டும்.

Leave a comment