இலங்கை கடற்படையினருக்கு அமெரிக்கா பயிற்சி

353 0

us-train-sln4-720x480அமெரிக்காவின் வெடிபொருள் செயலிழப்பு நடமாடும் பிரிவின், தொழில்நுட்ப நிபுணர்கள், இலங்கை கடற்படையினருக்கு பயிற்சியளித்துள்ளனர்.

நீருக்கு அடியில் வெடிக்காத நிலையில் உள்ள வெடிப்பொருட்களை அடையாளம் கண்டு செயலிழக்கச் செய்யும் வகையில் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் வைத்து இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி முதல் கடந்த 6ஆம் திகதிவரையில் நடைபெற்ற இந்த பயிற்சிகளால், நீருக்கடியில் உள்ள வெடிப்பொருட்களை அழிக்கும் திறன் கடற்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்க பசுபிக் கட்டளையகத்தின் நிபுணர்கள், அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகளை இலங்கை மற்றும் மாலைத்தீவின் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளனர்.

அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் நிலைகளில் ஏற்படுகின்ற எண்ணெய் கசிவுகளில் இருந்து பாதுகாப்பு பெறும் வகையிலான இந்த பயிற்சிகளில், பொது மற்றும் இராணுவத் தரப்பினர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தில் அவர்களுக்கான தொட்டுணரக்கூடிய வகையிலான நேரடிய பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.