பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 28ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக பெறப்பட்ட 274 இலட்சம் ரூபா பணத்தைப் பயன்படுத்தி பொரள்ளை – கிங்சி வீதியில் வீடொன்றைக் கொள்வனவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
மஹிந்தானந்த அளுத்கமகே தலைவராக இருந்த இலங்கை சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் பொருளாளராக இருந்த கஹவகே டக்ளஸிடம் இன்றைய தினம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
மேலதிக குறுக்கு விசாரணை எதிர்வரும் 28ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக பெறப்பட்ட 274 இலட்சம் ரூபா பணத்தைப் பயன்படுத்தி பொரள்ளை – கிங்சி வீதியில் வீடொன்றைக் கொள்வனவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.