சுதேச சிந்தனையுடன் கூடிய சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகள் சபையின் 71வது பொது சபை மாநாட்டின் விவாதத்தில் உரையாற்றியுள்ளார்.
நியுயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மாநாட்டில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை அவரது உரை இடம்பெற்றிருந்தது.
இலங்கையின் இறைமை, சுயாதீனம் மற்றும் பன்முகத்தன்மையை பாதுகாத்துக் கொண்டு, தேசிய மறுசீரமைப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுவே அரசாங்கத்தின் இலக்காக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் சர்வதேச மற்றும் தேசிய மட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
போதைப் பொருள் பிரச்சினை தற்போது பாரிய பிரச்சினையை மாற்றம் பெற்றுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச வேலைத்திட்டத்தின் செயற்பாடுகள் தற்போதை விட, உரிய மற்றும் வலுவான நிலையில் காணப்பட வேண்டும்.
ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் என்பன நிலைநாட்டப்படும் வகையில் இலங்கையில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் இதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பையும் அவர் கோரியுள்ளார்.