ஐக்கிய தேசிய கட்சிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் கொள்கை ரீதியில் எவ்விதமான வேறுப்பாடுகளும் கிடையாது. இரண்டு தரப்பினரும் ஊழல் மோசடிகளுக்கே துணை போகின்றனர். வடமாகாண சபையின் பதவி காலம் நிறைவடைந்தவுடன் அங்கு இடம்பெறுகின்ற நிர்வாக முறைகேடுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டும் என பேராசிரியர் ஜி. எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்
மாகாண சபை தேர்தலை நடத்த எவ்விதமான முன்னேற்றகரமான முயற்சிகளும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை . மாறாக தேர்தலை பிற்போடும் முயற்சிகள் மாத்திரமே இடம் பெறுகின்றது எனவும் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.