கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியில் வழங்கப்பட்ட பால் பெக்கட்டுக்களில் எவ்வித விஷமும் கலக்கப்படவில்லை என இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள் ஊடாக தெரியவந்துள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று (08) பதுளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினால் இது தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பால் பெக்கட்டுகளை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்திய போது அதில் எவ்வித விஷமும் இல்லை என தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனூடாக கடந்த 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி தோல்வியில் முடிவடைந்தமை தெரிய வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.