புனர்வாழ்வுக்கு தெரிவாகியுள்ள 23 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது

396 0

jailபயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வுக்குப்படுத்தப்படலாம் என அரசாங்கத்தினால் கருதப்பட்ட 23பேரின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட 96 சந்தேகநபர்களில் 23 பேருக்கு இவ்வாறு புனர்வாழ்வு பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு நேற்றைய தினம் தெரிவித்திருந்தது.

குறித்த 23பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபரிடம் மீள்குடியேற்ற அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைய சிறிய குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்ட 23 பேரை புனர்வாழ்விற்கு உட்படுத்தப்படவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது.

download-61download-62