ரூபாவின் பெறுமான வீழ்ச்சியில் அரசியல் லாபம் தேட எதிரணி முயற்சி- ஹர்ஷன

407 0

ரூபாவின் பெறுமான வீழ்ச்சியை வைத்து அரசியல் லாபம் தேட கூட்டு எதிர்க் கட்சி முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.

சிறிக்கொத்த தலைமையகத்தில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ரூபாவின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடைவதற்கு அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையை காரணம் காட்ட கூட்டு எதிரணியினர் முற்பட்டுள்ளனர். இந்த ரூபா வீழ்ச்சியின் பின்னாலுள்ள நியாயமான காரணங்களை மக்களின் கண்களுக்கு மறைப்பதற்கு கூட்டு எதிரணி முயற்சிக்கின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment