வெடுக்குநாறிமலையில் தொல்லியல் ஆய்வுகள் தமிழ் தொல்லியலாளர்கள் முன்னிலையிலேய மேற்கொள்ளப்படவேண்டுமென சமூக செயற்பாட்டாளர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வவுனியா,மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு பொறுப்பாக உள்ள தொல்லியல் அதிகாரி இன்றைய தினம் வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தார்.நெடுங்கேணி பொலிஸாரின் பாதுகாப்போடு வருகை தந்த அவர், சில விடயங்களை அங்கு சென்ற எம்மோடு கலந்துரையாடியிருந்தார்.
நேற்றைய தினம் இங்கு வருகை தந்த அரசியல் வாதிகள் வடமாகாண உயர் பொலிஸ் அதிகாரி அவர்களுக்கு எங்களுக்கு எதிராக ஒரு மனு ஒன்றை கொடுத்திருக்கின்றார்கள்,அதாவது நாங்கள் இங்கு ஒரு ஆய்வுகளையும் செய்வதில்லை, ஆய்வுகளை செய்ய பயப்படுகிறார்கள்,உடனே அவர்களை ஆய்வுகளை செய்ய சொல்லுங்கள் என அந்த மனுவில் தெரிவித்திருக்கின்றனர்.அதனால்தான் இன்று இங்கு வருகை தந்திருக்கின்றேன் என்றார்.
அதன் பின்னர் அவர் எம்மோடு உரையாடிய போது நேற்று வருகை தந்தவர்களுக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை.நாங்கள் ஆய்வுகளை நடுநிலையாகத்தான் செய்வோம் எங்கள் மதம் சார்ந்தோ அரசியல் கட்சிகள் சார்ந்தோ ஆய்வுகளை செய்ய மாட்டோம்.அரசியல் வாதிகள்தான் நாட்டை குழப்புகின்றார்கள் அவர்களால் எங்களுக்கும் நிம்மதி இல்லை,உங்களுக்கும் நிம்மதி இல்லை.நாங்கள் கேட்டோம் சிங்கள மொழி பேசுபவர்களா? ஆய்வுகளை செய்ய போகின்றார்கள்?
பதில்-ஓம் அதற்கு நாங்கள்- அப்படியானால் ஆய்வுகளை செய்ய விடமாட்டோம். தமிழில் தொல்லியல் சார்ந்த தேர்ச்சி பெற்ற பேராசிரியர்கள் இருக்கின்றார்கள், யாழ். பல்களைக்கழகத்தில் தொல்லியல்துறை மாணவர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் ஊடாக ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள்.
பதில்-சிரிப்போடு யார் பேராசிரியர்கள்?
நாங்கள்-இந்திரபால சேர்,புஷ்ப்பரட்ணம்சேர்,பத்மநாதன் சேர் ஆகியோர் இந்த மலையை பற்றி எழுதியிருக்கின்றார்கள் அகவர்கள் ஊடாகவும் அவர்களின் மாணவர்கள ஊடாகவும் செய்வோம்.
பிரபாகரன் நல்ல மனிதன் அவர் இருந்த காலத்தில் தொல்லியல் சின்னங்கள் அனைத்தும் பாதுகாப்பாக பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றது.
இன்று அதனை சில அரசியல் வாதிகள் அழிக்க முற்படுகின்றார்கள். அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்ததாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.