வரலாற்று சிறப்புமிக்க குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை ஆதிசிவனுக்கும், ஐயனாருக்கும், கிராமத்து மக்களாலும் இளைஞர்களாலும் பொங்கல் பொங்கி வழிபாடு மேற்கொண்டனர்.
முல்லைத்தீவு குமுழமுனை- தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் இன்றுறைய தினம் இந்த பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றது.
குமுழமுனைப் பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி இந்த பொங்கல் பொங்கி, பூசை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் கலந்துகொண்டுள்ளார்.
குறித்த மலைப்பகுதியில் புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்காக இரண்டு பௌத்த மத துறவிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் சென்று பாரிய குழப்பம் ஏற்ப்பட்டதோடு இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு இடம்பெறுவதோடு நீதிமன்றால் பாரம்பரியமாக வழிபாடு நடத்திய மக்கள் வழிபாடுகளில் ஈடுபடவும் நீதிமன்று அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.