இலங்கையில் உள்ள ஊடகங்கள் ஊடாக எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த வழிகாட்டல்களைப் பெற்றுக்கொடுக்க புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய வியாபார அமைப்பு இந்தக் கோரிக்கையினை கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அரச ஊடகங்கள் பலராலும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவதாகவும்,எனவே நவீன சமுதாயத்திற்கு இது சிறந்த இலட்சணங்களாக தமது அமைப்பு கருதவிலை என்றும் குறித்த விமர்சனங்களுக்கு முற்றுபுள்ளி வைப்பது அரசின் கடமை என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சிறுவர்களுக்கு சிறந்தது’ என்ற கருத்தை விளம்பரப்படுத்தும் எமது சமூகம் அவற்றை ஊடகங்கள் ஊடாக அதை நடைமுறையில் காண்பதற்கு தவறுவதாகவும் எனவே நாட்டின் தலைவர் என்ற வகையில் இது தொடர்பில் அவதானம் செலுத்தி எதிர்கால சிறுவர்களை பாதுகாப்பதற்கு ஊடகங்களின் நடவடிக்கைகளுக்கான கொள்கைகளை திட்டமிடுமாறும் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.