முற்போக்குத் தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.
மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணியில் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வியாழேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டு தமிழர்களின் ஒருமித்த குரல், அரசியல் கைதிகளை விடுதலை செய், இனத்துக்காகப் போராடியவர்கள், குற்றவாளிகளா,? நல்லாட்சி அரசாங்கம் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும், அரசியல் கைதிகளின் ஆயுள் சிறைக்குள்ளேயே முடிவடைவதா?
போன்ற வாசகங்ககளையுடைய சுலோகங்கள் தாங்கியவாறு கோசங்களையும் எழுப்பியவாறு அங்கிருந்து மணிக்கூட்டு கோபுரம் ஊடாக நகர தனியார் பஸ் தரிப்பிடம் வரையில் சென்று மீண்டும் காந்திப் பூங்கா வரை வந்து நிறைவடைந்தது. சுமார் 30 நிமிடம் கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.