சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய மழை பெய்தது.
சென்னையில் கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்தாலும், மாலை நேரங்களில் லேசான மழை பெய்து குளிர்வித்து வருகிறது.
இதற்கிடையே, அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மிதமான மழை பெய்து வருகிறது.
எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
நேற்று காலை முதல் மாலை வரை லேசான மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வந்த நிலையில், நள்ளிரவு முதல் விடிய விடிய பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.