இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதுவர் ஹான்ஸ் பீட்டர் மொக் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது சுவிஸ்லாந்து தூதுவர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கிடையில் சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த சந்திப்பின் போது, சுவிஸ் தூதரக பாதுகாப்பு ஆலோசகரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.