வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 அயிரம் ரூபாவுக்குரிய உணவுப் பொதிகள்-துமிந்த திசாநாயக்க

4990 0

வரட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் 4,000 ரூபா மற்றும் 5,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை தொடர்ந்தும் சில மாதங்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்கென அரசாங்கம் மாதாந்தம் 2,030 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை நுகர்வோர் சபை, சுகாதார அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து உணவுப் பொருட்களை பொதி செய்து இன்னும் ஓரிரு தினங்களில் விநியோகிக்க ஆரம்பிக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று அல்லது அதனிலும் குறைவான எண்ணிக்கையுடைய குடும்பங்களுக்கு 4,000 ரூபா பெறுமதியான உணவுப் பொதியும் மூவரிலும் அதிக எண்ணிக்கையுடை குடும்பங்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான உணவுப் பொதியும் வழங்கப்படுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a comment