ஐ.நா. சபையில் ஆப்கான் துணை ஜனாதிபதி பேச்சு

359 0

201609220558075463_world-knows-where-taliban-leaders-live-afghanistan-vp_secvpfதலிபான் தலைவர்கள் பாகிஸ்தானில் இருப்பது உலகத்திற்கே தெரியும் என்று ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசிய ஆப்கானிஸ்தான் துணை ஜனாதிபதி சர்வார் டேனிஷ் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தலிபான் தலைவர்கள் பாகிஸ்தானில் இருப்பது உலகத்திற்கே தெரியும் என்று ஐ.நா. பொது சபை கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் சார்பில் துணை ஜனாதிபதி சர்வார் டேனிஸ் பேசியதாவது:-

ஆப்கான் பாதுகாப்பு படைகள் நூற்றுக்கணக்கான தலிபான்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றியுள்ளது. இருப்பினும் தீவிரவாதிகள் வெளிநாடுகளின் மண்ணில் இருந்து செயல்படுகிறார்கள்.

காபூல் நகரில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பாகிஸ்தான் மண்ணில் திட்டமிடப்பட்டது. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகழிடமாக திகழ்வதாக ஆப்கானிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. இருப்பினும் அந்த நிலைமையில் எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை.

தலிபான் மற்றும் ஹக்கானி தீவிரவாதிகள் பயிற்சி அளித்தல், ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி அனைத்து பாகிஸ்தான் மண்ணில் நடக்கிறது.

தலிபான் தலைவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று உலகத்திற்கே தெரியும். பாகிஸ்தானை சொந்த மண்ணில் உள்ள தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டட்டும். ஆனால் அது நடக்கப் போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் நேற்று இரவு பேசியது குறிப்பிடத்தக்கது.