உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா தனித்து போட்டி

329 0

201609220949442466_la-ganesan-says-bjp-alone-contest-in-localbody-election_secvpfதமிழக உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா தனித்து போட்டியிடும் என தேசிய குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனி மற்றும் திண்டுக்கல்லில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இக்கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது. இதில் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்து கொண்டார்.

கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய மந்திரி சதானந்தகவுடா ஆகியோர் கூறிய கருத்துகள் அவர்களின் சொந்த கருத்துகளாகும். அவை பாரதிய ஜனதா கட்சியின் கருத்து இல்லை. தமிழகத்தில் நியாயமான கோரிக்கைகளை பாரதிய ஜனதா ஆதரிக்கிறது.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் ராமேஸ்வரத்தில் கர்நாடக மாநிலத்தவரை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம். தேர்தலில் போட்டியிட கட்சியினரிடமிருந்து விருப்பமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.