தேசிய அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து, தேசிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான மறைமுக நடவடிக்கைகளை பொது எதிரணி முன்னெடுத்து வருவதாக அதன் செயற்பாட்டாளர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவு திட்டம் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,நல்லாட்சி அரசாங்கம் மீது நாட்டு மக்கள் மாத்திரமின்றி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் அதிருப்தியுடனேயே காணப்படுகின்றன. பொது எதிரணியின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது சில சிறுபாண்மைக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் தமது அதிருப்தியினை அவர்களிடம் வெளிப்படுத்தியுள்ளனர். எனவே அடுத்த மாதம் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்திற்கு சிறுபாண்மைக்கட்சிகள் எதிராக வாக்களிக்கக் கூடிய வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகின்றன.