கொழும்பு மாநகர சபையில் பெண்களுக்கெதிராக வன்முறை – ரோஸி

254 0

கொழும்பு மாநகர சபையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றமைத் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர சபை மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்​வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், குறித்த வன்முறைத் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்த அறிக்கையை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், தான் இருக்கும் வரை எவருக்கெதிராகவும் வன்முறைகள் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டேன் என்றார்.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில், முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த விசாரணைகள் தொடர்பான அறிக்கை தன்னிடம் கிடைக்கவில்லை. மனித வள பிரிவு ஒன்று இல்லாமைக்கான பிரதிகூலமே இதுவெனத் தெரிவித்த, ரோஸி சேனாநாயக்க 3 மாதங்களுக்குள் மனித வள பிரிவை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a comment