மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட புதிய தொழில் பயிற்சிக்கு 200 பேர் தெரிவு

243 0

இலங்கையின் 25,000 தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் விஞ்ஞான தொழில் நுட்ப ஆராய்சி திறன்கள் அபிருத்தி மற்றும் வாழ்க்கை தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட தொழில் பயிற்சி நெறிகளில் மாணவர்களை தெரிவு செய்து அவர்களை பயிற்சி நெறிகளில் இணைக்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று மாலை மன்னார்  நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.

மோட்டார் வாகன துறை, சுற்றுலாதுறை, சுகாதாரதுறை , கட்டுமான துறை என பல் துறைகளில் பயிற்சிகளை பெற தகுதியுள்ள மாணவர்களை நேர்முக தேர்வு மூலம் தெரிவு செய்து அவர்களுக்குறிய தகுதிகளின் அடிப்படையில் பயிற்சி நெறிகளை தொடரும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

குறித்த ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ், சிறப்பு விருந்தினராக மன்னார் மற்றும் மடு வலயகல்வி பணிப்பாளர் திருமதி.சுகந்தி செபஸ்ரியன், மத்திய வங்கியின் பிராந்திய உத்தியோகத்தர் திருமதி.கிறிஸ்றின் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இவ் நிகழ்வில் தொழில் பயிற்சி நெறிகளின் முழுமையான விளக்கமும் மற்றும் விருந்தினர்கள் உரை மற்றும் கலை நிகழ்வுடன் விரைவில் பயிற்ச்சி நெறிகளை ஆரம்பிக்க இருக்கும் 200 இளைஞர் வரவேற்கும் நிகழ்வும் இடம் பெற்றது.

குறித்த பயிற்சி நெறிகளை முழுமையாக நிறைவு செய்பவர்களுக்கு தேசிய ரீதியில் சான்றிதல்களுடன் புதிதாக தொழில் தொடங்துவதற்கு 5 இலட்சம் ரூபா கடன் உதவியும் வழங்கப்பட இருக்கின்றமை குறிப்பிடதக்கது.

Leave a comment