பாவனைக்கு உதவாத அரிசி மீட்பு

308 0

riceமின்னேரியா பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் இருந்து, மனிதபாவனைக்கு உதவாத 32 ஆயிரம் கிலோ கிராம் அரிசி நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த அரிசி விற்பனை செய்வதற்காக களஞ்கியப் படுத்தப்பட்டிருந்ததாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட அரிசியின் மாதிரிகள் இரசாயன பகுப்பாய்வுப் பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.