கொழும்பு – கற்பிட்டிக்கு இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்றின் நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றைய (30) தினம் இரவு கொழும்பு – புத்தளம் வீதியில் பங்கதெனியா பிரதேசத்திலேயே குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
தாக்கப்பட்ட நபர் அருகிலுள்ள ஆராச்சிக்கட்டுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும், சம்பவம் இடம்பெற்ற பிரதேசம் சிலாபம் பொலிசாரின் வசமாதலால், குறித்த முறைப்பாடு சிலாபம் பொலிஸ் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ஆராச்சிக்கட்டுவை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் நடத்துனரைத் தாக்கிய இரு நபர்களும் தனியார் பஸ் நடத்துனர்கள் எனவும், அவர்கள் முச்சக்கர வண்டியிலேயே வந்து தாக்கியதாகவும் முறைப்பாடுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
எனினும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் சிலாபம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.