அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தின் காரணமாக, நாடு பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கட்டான பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவதற்கு அதிருப்தி தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலமையின் அடிப்படையில் நாடு நாள் தோறும் சிக்கலான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.