இன்றைய தலைமுறையினர் உலகத்தை உள்ளங்கையில் வைத்திருப்பது போல், தொலைபேசியை கையில் வைத்துக் கொண்டு திரிகிறார்கள்.

எப்போது பார்த்தாலும் யாரிடமாவது பேசிக்கொண்டும் அல்லது யாரிடமாவது செட் செய்துக் கொண்டும் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு உண்மையை வைத்திய உலகம் கண்டறிந்து சொல்லியிருக்கிறது.

‘கடந்த சில ஆண்டுகளாக ஆண்களும், பெண்களும் பாரிய அளவில் காது கேளாமைக்கும், செவியின் கேட்பு திறன் குறைவு காரணமாக சிகிச்சைக்கு வருபவர்களும் அதிகமாகிக்கொண்டேயிருக்கிறார்கள்.

அதே போல் மூளையில் புற்றுநோய் கட்டிகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது என காது மூக்கு தொண்டை நிபுணர்கள் பங்குபற்றிய கருத்தரங்குகளில் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் தினமும் இருபது முதல் முப்பது நிமிடங்கள் தொலைபேசியில் பேசினால், இதன் காரணமாகவே, காதுகளில் வெப்பம் அதிகரிக்கிறது. அதாவது தொலைபேசியிலிருந்து வெளியாகும் வெப்ப கதிர்வீச்சு, காது மடல்களை வெப்பமாக்கி, அங்கிருக்கும் குருதியை சூடாக்குகிறது. இதனால் எமது உடலும் வெப்பமாகி, 98 டிகிரி பாரன்ஹீட்டில் இருக்கவேண்டிய உடலின் வெப்பம், சில சமயங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை செல்கிறது.

தொலைபேசி கோபுரங்கள் மற்றம் வைஃபை கதிர்வீச்சு காரணமாக தெற்காசியாவில் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

அத்துடன் நாளாந்தம் ஒருவர் தொடர்ச்சியாக முப்பது நிமிடங்களுக்கு மேல் தொலைபேசியில் பேசினால், அவர் எந்த வயதினராக இருந்தாலும் பத்து ஆண்டுகளுக்குள் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் வைத்திய நிபுணர்களி தெரிவித்திருக்கிறார்கள்.

டொக்டர் குரு பாலாஜி