கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதியுடன் உடனடி பேச்சுக்கு செல்ல வேண்டும் – வாசு

259 0

ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை நிலைநாட்ட கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதியுடன் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

 

எமது நாட்டு பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்ள சர்வதேச நாடுகள் இடமளிக்க வேண்டும். பிளவுபடாத கொள்கையையே நாங்கள் கொண்டு செல்கின்றோம். அத்துடன் பலஸ்தீன மக்களுக்கு நாங்கள் ஆதரவளித்து வருகின்றோம் என ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இந்த உரையானது அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அடித்த மறைமுக தாக்குதலாகும்.

ஜனாதிபதியின் கொள்கையுடன் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு தொடர்ந்து அமைச்சரவையில் இருக்க முடியாது. அதனால் அவர் உடனடியாக அமைச்சுப்பதவியில் இருந்து வெளியேறவேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை நிலைநாட்ட கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதியுடன் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டும் .

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a comment