திருகோணமலை உவர்மலைப் பிரதேசத்தில் புதிய இராணுவ அருங்காட்சியகம்

534 0

army-museum-3திருகோணமலை உவர்மலைப் பிரதேசத்திலுள்ள 22ஆவது டிவிசன் தலைமையகத்தில், சிறீலங்கா இராணுவம் புதிய இராணுவ கண்காட்சியகம் ஒன்றைத் திறந்துள்ளது. இக்கண்காட்சியகம் கடந்த 19ஆம் திகதி இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வாவால் திறந்துவைக்கப்பட்டது.

திருகோணமலைத் துறைமுகத்தை நோக்கியதான உவர் மலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த திறந்தவெளி அருங்காட்சியகம், நாட்டிலேயே மிகப் பெரியதாகும்.

இந்த அருங்காட்சியகத்தில், கண்காட்சிப் பகுதி, காலாட்படை ஆயுதங்கள், கவச வாகனங்கள், ஆட்டிலறிப் பீரங்கிகள் மற்றும் பல போர்த்தளபாடங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இங்கு, காலணித்துவ ஆட்சியிலிருந்து விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தம் வரை பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.